இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் திரையுலகம் மற்றும் இசை ரசிகர்களால் இசைஞானி என்று அன்போடு அழைக்கப்படும் இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில், பாராட்டு விழா நடத்த பாலிவுட் தயாரிப்பாளர் பால்கி முடிவு செய்துள்ளார். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான பால்கி இயக்கத்தில் வெளிவந்த சீனி கம், பா ஆகிய இந்தி படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் பால்கியுடன் இணைந்துள்ளார்.

தனது இயக்கத்தில் தனுஷ்-அமிதாப் இணைந்து நடிக்கும் ஷமிதாப் படத்திற்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக பால்கி தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 20ம் தேதி மும்பையில் நடைபெறும் பாராட்டு விழாவில் லதா மங்கேஷ்கர், எஸ்.ஜானகி, பி.சுசீலா ஆகிய பாடகர்களும், அவரது படங்களில் நடித்த நடிகர்கள் உள்பட பல திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளதாக பால்கி கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: