செய்திகள்,விளையாட்டு 600 ரன்னை கடந்து விராட் கோலி சாதனை!…

600 ரன்னை கடந்து விராட் கோலி சாதனை!…

600 ரன்னை கடந்து விராட் கோலி சாதனை!… post thumbnail image
சிட்னி:-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வீராட்கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் அவர் முதல் இன்னிங்சில் 115 ரன்னும், 2–வது இண்ணிங்சில் 141 ரன்னும், மெல்போர்னில் நடந்த 3–வது டெஸ்டில் 169 ரன்னும் எடுத்தார். தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்டில் 4–வது சதத்தை எடுத்து முத்திரை பதித்தார்.

கேப்டன் பதவியில் 3–வது செஞ்சூரியை எடுத்தார். அடிலெய்டு டெஸ்டில் அவர் முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றார். கேப்டன் பதவியில் அவர் சந்திக்கும் 2–வது போட்டி சிட்னி டெஸ்ட் ஆகும். 33–வது டெஸ்டில் விளையாடும் வீராட் கோலிக்கு இது 10–வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6–வது செஞ்சூரியை பதிவு செய்தார். மேலும் இந்த டெஸ்ட் தொடரில் கோலி 630 ரன்னுக்கு மேல் எடுத்து புதிய சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு ராகுல் டிராவிட் 4 டெஸ்டிலும் சேர்த்து (8 இன்னிங்ஸ்) 619 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதை கோலி முறியடித்தார். அவர் 4 டெஸ்டில் 7 இன்னிங்சில் 630 ரன்னுக்கு மேல் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த இந்தியர் என்ற சாதனையை புரிந்தார். இதில் 4 சதமும், ஒரு அரை சதமும் அடங்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி