செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: 9 பேர் பாதிப்பு!…

டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: 9 பேர் பாதிப்பு!…

டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: 9 பேர் பாதிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும், தொற்று நோய் தடுப்பு அலுவலகர்களும் அவசர கூட்டம் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையே டெல்லியில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. கடந்த டிசம்பர் 26ம் தேதி கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 51 வயது பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. அவருக்கு அங்கு விசேஷ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேற்கு டெல்லி உத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவரும், பரீதாபாத்தைச் சேர்ந்த 39 வயது ஆண் ஒருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இருவரும் பலியானார்கள். அவர்கள் பன்றிக்காய்ச்சல் தாக்கியதில் தான் இறந்தனர் என்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்நிலையில் நேற்று பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 9 பேர் டெல்லியில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் பெண்கள் 5 பேர் ஆண்கள். இதையடுத்து டெல்லியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் பெண் டாக்டரும் ஒருவர். மத்திய டெல்லியைச் சேர்ந்த இவர் லேடி ஹார்டிங்கே ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தார். பன்றிக்காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து அவர் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி உறுதி செய்யப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி