பாலிவுட் வரலாற்றிலேயே இந்தியாவில் மட்டும் ரூ.305 கோடி வசூல் செய்து பிகே சாதனை!…

விளம்பரங்கள்

மும்பை:-அமீர் கான் நடிப்பில் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியான ‘பிகே’ திரைப்படம் பாலிவுட் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையாக நேற்று வரை 305.27 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்த வரலாற்று சாதனை படைத்த பாலிவுட் படம் இதுதான் என பிகே படத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர், அதிக வசூலை வாரிக் குவித்த ‘பாக்ஸ் ஆபிஸ் ஹிட்’ படங்களின் முதல் வரிசையில் அமீர் கான் நடிப்பில் வெளியான ‘தூம் 3’ (ரூ.271.82 கோடி), இரண்டாவது இடத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘கிக்’ (ரூ. 244 கோடி) மூன்றாவது இடத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ (ரூ.228 கோடி) ஆகிய படங்கள் இருந்து வந்தன.

‘தூம் 3’ படத்தின் வசூல் சாதனையை (ரூ.271.82 கோடி) தற்போது வெளியாகியுள்ள ‘பிகே’ (ரூ.305.27 கோடி) முறியடித்து விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல், வெளிநாடுகளிலும் சுமார் 150 கோடி ரூபாயை இந்தப் படம் சம்பாதித்து தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், வெளிநாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான வசூல் சாதனையை இன்னும் பிகே நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: