செய்திகள் பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…

பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…

பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி… post thumbnail image
ஐதராபாத் :- பன்றி காய்ச்சல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால் நோய் முற்றிய நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆந்திராவை விட தெலுங்கானாவில் தான் அதிகம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஐதராபாத் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதித்த 2 கர்ப்பிணி பெண்கள் பலியாகி உள்ளனர். மேலும் 35 பேர் உஸ்மானியா மருத்துவமனை மற்றும் காந்தி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 15 பேர் சிகிச்சைக்காக சேர்த்தனர். மெகப்பூப் நகர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடுமையான ஜுரம், இருமல், சளி, உடல் வலி, வாந்தி, பேதி ஆகிய அறிகுறி இருந்தால் உடனடியாக பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்யும்படி தெலுங்கானா அரசு சுகாதார துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் காய்ச்சிய குடிநீர் மற்றும் சூடான உணவு பொருளை பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்லும் போது துணியிலான முக கவசம் அணியும் படி கேட்டுக் கொண்டு உள்ளது.

மாவட்ட அளவில் தடுப்பு முகாம் தொடங்க அரசு முடிவு செய்து உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி