செய்திகள்,திரையுலகம் ஆம்பள (2015) திரைப்படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

ஆம்பள (2015) திரைப்படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

ஆம்பள (2015) திரைப்படத்தின் புத்தம் புதிய டிரைலர்… post thumbnail image
‘பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘பூஜை’ என வரிசையாக சொன்னபடி ரிலீஸ் செய்த விஷால், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கும் ‘ஆம்பள’ படத்தையும் சொன்னபடியே பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்காக பரபரப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் ஹன்சிகா, மாதவி லதா, மாதுரிமா என 3 நாயகிகளுடனும், ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா என அவர்களின் 3 அம்மாக்களுடனும் கலகலப்பாக உருவாகி வருகிறது ‘ஆம்பள’. இவர்களோடு வைபவ், பிரபு, ஸ்ரீமன், கௌதம், அபிஷேக், சந்தானம் என வழக்கம்போல் சுந்தர்.சியின் படை பட்டாளங்கள் இப்படத்திலும் இருக்கின்றன.

படப்பிடிப்பு நடைபெறும் இடங்களிலேயே அந்தந்த காட்சிகளுக்கான எடிட்டிங் வேலைகளையும் அவ்வப்போது முடித்துவருவதால் திட்டமிட்டபடி பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் எந்த குளறுபடியும் ஏற்படாதவாறு பார்த்து வருகிறது சுந்தர்.சி & விஷால் கூட்டணி.

இப்படத்தின் மூலம் ‘ஹிப் ஹாப் தமிழன்’ ஆதி இசையமைப்பாளராக அறிமுகமாகியிருப்பதால் ‘ஆம்பள’ படத்தின் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆம்பள (2015) திரைப்படத்தின் புத்தம் புதிய டிரைலர் வெளியீடு:-

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி