அரசியல்,செய்திகள் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்…!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்…!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்…! post thumbnail image
சென்னை :- தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொ.மு.ச., மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றன. ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், வேலை நேரத்தை குறைப்பது உள்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வந்தனர்.

அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முதலில் சுமூகமான தீர்வுகள் ஏதும் எட்டவில்லை. இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பேச்சுவார்த்தை இன்று நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் தொழிலாளர் சங்கம் சார்பில் சண்முகம், நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சின்னசாமி, சி.ஐ.டி.யு.. சங்கம் சார்பில் சவுந்தரராஜன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். மொத்தம் 12 தொழிற்சங்கம் சார்பில் அதன் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.

ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக குழு அமைக்க அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. கைதான தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது. பேச்சுவார்த்தை குழுவை ஓரிரு நாளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் அளித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி