அரசியல்,செய்திகள் சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…

சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…

சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்… post thumbnail image
புதுடெல்லி :- மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சேதுசமுத்திர திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்திற்காக நிபுணர் குழுவால் ராமர் பாலத்தை இடிக்காமல் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 4 மற்றும் 5 புதிய வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கடந்த நவம்பர் மாதம் நானும் நேரில் விமானம் வழியாக சேதுசமுத்திரக் கால்வாய் வழித்தடங்களில் மாற்றுப் பாதை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.

இந்த திட்டங்கள் குறித்த ஆய்வு முடிவுகள் பிரதமர் மற்றும் மந்திரிசபையின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. உரிய ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய திட்டம் குறித்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் புதிய துறைமுகம் அமைப்பது குறித்த திட்ட வரைவு மாநில அரசின் ஆலோசனைக்காகவும் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது. மாநில அரசிடமிருந்து உரிய பதில் கிடைத்தவுடன் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் மொத்தம் 12 துறைமுகங்களை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி