செய்திகள்,முதன்மை செய்திகள் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம்…

கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம்…

கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம்… post thumbnail image
பாங்காக் :- பாங்காக்கின் டான் முயெங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொன் கேன் பகுதிக்கு நேற்று காலை 11.10 மணிக்கு ஏர் ஏசியா நிறுவனத்தின் எப்டி3254 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்டில் ஒழுங்கற்ற நிலை இருந்ததை விமானிகள் கண்டுபிடித்தனர். இதனால், ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று கருதி மீண்டும் டான் முயெங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியதாக ஏர் ஏசியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஆய்வு மேற்கொண்ட பொறியாளர்கள், ஒழுங்கற்ற சேமிப்பக முறை காரணமாக விமானத்திற்கு எந்த தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்படவில்லை என உறுதி செய்த பின் விமானம் மீண்டும் அதன் பயணத்தை மேற்கொண்டது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அளித்த தாய் ஏர் ஏசியா நிறுவனம், ‘டான் முயெங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தின் விமானிகள், அந்த விமானத்தில் சேமிப்பக முறையில் சிறிய ஒழுங்கற்றநிலை இருந்ததை கண்டறிந்தனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு விமானத்தை விரிவான ஆய்வுக்காக மீண்டும் டான் முயெங் சர்வதேச விமான நிலையத்தில் விமானிகள் தரையிறக்கினர்’ எனத் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி