ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் அறிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், எந்தவித வைப்புத்தொகையும் இல்லாமல் ஏழைகள் வங்கி கணக்கு தொடங்கலாம். இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்குப் பிறகு வங்கி கணக்கு மூலம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. அந்த தொகையை முறையாக திருப்பி செலுத்தினால் ரூ. 15 அயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் வங்கி கணக்குக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். இதனால் ஒருவர் பல முகவரியில் இந்த வங்கி கணக்கை தொடங்க முடியாது.
‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் 2018–ஆம் ஆண்டு ஆகஸ்டு 14–ந் தேதிக்குள் 15 கோடி வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பாக 2015 ஜனவரி 26–ந் தேதிக்குள் 10 கோடி வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து வங்கிகளிலும் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே 10 கோடியே 8 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த கணக்கை தொடங்கிய அனைவருக்கும் ஜனவரி 15–ந் தேதிக்குள் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: