செய்திகள்,திரையுலகம் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் தேர்தல் பிரசாரம்!…

ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் தேர்தல் பிரசாரம்!…

ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் தேர்தல் பிரசாரம்!… post thumbnail image
மும்பை:-இலங்கையில் ஜனவரி 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மைத்திரி பால சிறிசேனா என்ற பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தமுறையும் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்போடு தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் ராஜபக்ஷே.

இந்நிலையில், ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இலங்கை சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். சல்மான் கான் உடன் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸூம் பிரசாரம் செய்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி