‘கத்தி’ படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் நடிகர் விஷால் தான்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஷால் இந்த தீபாவளிக்கு ‘கத்தி’ படத்திற்கு போட்டியாக தன் பூஜை படத்தை ரிலிஸ் செய்தார். அப்படியிருக்க அந்த படத்தின் வெற்றிக்கு இவர் எப்படி காரணம் ஆகமுடியும் என்று நீங்கள் கேட்கலாம். இதை கூறியது வேறு யாரும் இல்லை, கத்தி படத்தில் காமெடியனாக நடித்த சதீஸ் தான். ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய சதீஸ், விஷால் மிகவும் தைரியமான மனிதர், திருட்டு விசிடி விற்பவர்களை தானே நேரில் சென்று போலிஸில் பிடித்து கொடுத்தார். அந்த வகையில் விஜய்யின் கத்தி பட வெற்றிக்கு விஷால் திருட்டு விசிடி எதிர்ப்பும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி