செய்திகள்,திரையுலகம் ‘விஜய் 58’ படத்தில் இணைந்த வித்யுலேகா ராமன்!…

‘விஜய் 58’ படத்தில் இணைந்த வித்யுலேகா ராமன்!…

‘விஜய் 58’ படத்தில் இணைந்த வித்யுலேகா ராமன்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் வித்யுலேகாவும் இணைந்துள்ளார். இவர் ஏற்கெனவே, விஜய்யின் ‘ஜில்லா’ படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரம்’ ஆகிய படங்களில் சந்தானத்தின் ஜோடியாகவும் நடித்திருப்பார். சிம்பு தேவன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஈசிஆர் அருகே போடப்பட்டுள்ள மாபெரும் செட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கதை சரித்திர பின்னணி மற்றும் இன்றைய காலகட்டம் என இரு மாறுபட்ட காலகட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்கால காட்சிகளை கேரளாவில் படமாக்க இருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி