செய்திகள்,திரையுலகம் பாலிவுட் ஹீரோக்கள் அசுத்தமானவர்கள் – நடிகை கத்ரீனா கைப்!…

பாலிவுட் ஹீரோக்கள் அசுத்தமானவர்கள் – நடிகை கத்ரீனா கைப்!…

பாலிவுட் ஹீரோக்கள் அசுத்தமானவர்கள் – நடிகை கத்ரீனா கைப்!… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனாவிடம் பாலிவுட் ஹீரோக்களை பற்றி கேட்க, தனது மனகுமுறல்களை எல்லாம் கொட்டி தீர்த்து பாலிவுட் ஹீரோக்களை நாறடித்துவிட்டார். கத்ரீனா கூறியதாவது, பாலிவுட்டில் ஹீரோக்கள் ரொம்ப மோசமானவர்கள், சுத்தமற்றவர்கள்.

இரவெல்லாம் குடித்துவிட்டு காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு குளிக்காமல் கூட கிளம்பி வந்துவிடுகிறார்கள். அவர்கள் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது ரொம்ப சிரமப்படுகிறேன். சில சமயங்களில் அந்த நாற்றத்தால் வாந்தி கூட வந்துவிடுகிறது. நான் எந்தளவுக்கு கஷ்டப்படுகிறேன் என்று அந்த கடவுளுக்கு தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

அதேசமயம் தென்னிந்திய ஹீரோக்கள் சூப்பரானவர்கள். ஹீரோயின்களை மதிக்க தெரிந்தவர்கள். பாலிவுட் ஹீரோக்கள், தென்னிந்திய ஹீரோக்களை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி