செய்திகள்,திரையுலகம் கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல் ஒரு பார்வை!…

கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல் ஒரு பார்வை!…

கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல் ஒரு பார்வை!… post thumbnail image
• கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்கில் இயக்கிய ‘மரோசரித்திரா’ படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழகத்திலும் இப்படம் பெரிய வரவேற்பை பெற்றதால் தமிழில் அதை எடுக்கவில்லை. இந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ என்ற பெயரில் அதை ரீமேக் செய்தார். கமல், ரதி நடித்தனர். இப்படம் வெளியாகி இந்தி பட உலகையே கலக்கியது. இந்தி பட உலகில் ராஜ்கபூர் எடுத்த ‘பாபி’ படத்துக்கு பிறகு பெரிய வெற்றியை பெற்ற படமாக இது அமைந்தது. இந்தி பட உலகினர் பாலச்சந்தரை வியந்து பாராட்டினார்கள். மும்பையில் இளைஞர்கள் படத்தை பார்த்து பைத்தியமாகி அங்குள்ள கடற்கரையில் நாயகன், நாயகி பெயரை இருநூறு மீட்டர் தூரம் மணலிலேயே எழுதி வைத்து வியக்க வைத்தனர்.

• அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானாலும் அதில் அவருக்கு சிறிய கேரக்டர்தான். ‘மூன்று முடிச்சு’ படம்தான் அவரை பிரபலமாக்கியது. இந்த படத்தில் ரஜினியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னால் அவரிடம் பாலச்சந்தர் சிகரெட்டை தூக்கி போட்டு வாயால் பிடிக்கிற பயிற்சியை செய்து கொண்டு வா. அதை சரியாக செய்தால் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று நிபந்தனை விதித்தாராம். ரஜினியும் அப்படியே பயிற்சி எடுத்து நடித்தார். ரஜினியின் அந்த ஸ்டைல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பிறகு ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திலும் அதே சிகரெட் ஸ்டைல் இடம் பெற்றது.

• ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் ‘ரோஜா’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். இந்த படத்தை அவரது கவிதாலயா பட நிறுவனம்தான் தயாரித்தது. இயக்குனர்கள் விசு, மவுலி, அமீர்ஜான், இசை யமைப்பாளர்கள் மரகதமணி, சாக்ஸபோன் கலைஞர் கத்ரி போன்றோரும் பாலச்சந்தர் தயாரித்த படங்கள் மூலம்தான் அறிமுகமானவர்கள்.

• சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய பாலச்சந்தர், நமது இளைய சமுதாயத்தினர் அதிகமாக மது அருந்துவதாக படங்களில் காட்டுகிறார்கள். இந்த போக்கு அபாயகரமானது. நாம் இதை மாற்ற வேண்டும். படங்களில் இளைஞர்கள் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றார். பாலசந்தர் விடுத்த கடைசி வேண்டுகோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி