முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஒமர் அப்துல்லா!…

விளம்பரங்கள்

ஜம்மு:-ஜம்மு-காஷ்மீரில் 87 தொகுதிகளுக்கு 5 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) 28 தொகுதிகளிலும், பா.ஜனதா 25 தொகுதிகளிலும், தேசிய மாநாட்டு கட்சி 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மாநில முதல்வராக உள்ள ஒமர் அப்துல்லா தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் சோனாவார் தொகுதியில் தோல்வியை தழுவினார். மற்றொரு தொகுதியில் நூலிழையில் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் முடிவில் அதிக இடங்களை பிடித்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு கோரும் பட்சத்தில் பரீசிலிக்க தயாராக உள்ளதாக ஒமர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: