செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!…

180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!…

180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இதற்கு கே2 மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் பறந்து அண்டத்தில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ‘கெப்லர்’ விண்கலம் எடுத்து அனுப்பிய புதிய போட்டோக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

மகாஸ் சூசெட்ல் கேம்பிரிட்ஜில் உள்ள விண்வெளி இயற்பியல் ஹார்வர்டு ஸ்மித் சோஷியன் மையத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆண்டரூ வான்டர் பெர்க் தீவிர ஆய்வு மேற்கொண்டார். அதில் பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் விண்வெளியில் இருப்பது தெரியவந்தது. இதற்கு எச்.ஐ.பி.116454பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியை விட 2½ மடங்கு பெரியதாக உள்ளது. அதன் அருகே சூரியன் உள்ளது. இது பூமியின் சூரியனை விட சிறியதாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளது.

இந்த சூரியன் மூலமே புதிய கிரகம் வெப்பம் அடைகிறது. அதன் மூலம் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 180 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. இந்த கிரகம் பூமியை விட 12 மடங்கு எடை அதிகம் உள்ளது. கே2மிலின் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை 35 ஆயிரம் நட்சத்திரங்கள் மற்றும் பல நட்சத்திர கூட்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி