செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை!…

‘லிங்கா’ பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை!…

‘லிங்கா’ பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்த லிங்கா படத்தின் வசூல் குறைந்து விட்டதாகவும், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்றும். படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை படத்தை வாங்கி திரையிட்டிருக்கும் வேந்தர் மூவீஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 2 நாட்களாக லிங்கா படத்தின் வசூல் பற்றிய தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகிறார்கள்., லிங்கா வெளியான நேரத்தில் தமிழகமெங்கும் அரையாண்டு தேர்வுகள் நடந்ததாலும், நாங்கள் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டதாலும் எதிர்பார்த்த அளவை விட சற்று வசூல் குறைந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக மக்களின் வருகையால் தியேட்டர்கள் நிரம்பி வழிகிறது. இதுவே வெற்றிக்கு சாட்சி.

லிங்கா மக்களுக்கு பிடித்த படம், விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாகவும் நிச்சயம் இருக்கும். எனவே படத்தின் வசூல் பற்றி எல்லா விபரங்களும் நாங்கள் அறிவிப்பது மட்டுமே உண்மையானது. மேலும் லிங்கா பற்றிய அவதூறான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி