அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!…

சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!…

சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!… post thumbnail image
பெய்ஜிங்:-ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 12 ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் தலா 4 நாடுகள், ஐரோப்பாவின் 8 நாடுகள், மற்றும் ஓசியானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 30 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுப்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகில் சிறந்த தலைவர்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். சீன அதிபர் ஜீ ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் பெற்றுள்ள புள்ளிகள் 7.5 ஆகும். அவருக்கு சற்று குறைவாக 7.3 புள்ளிகள் பெற்ற மோடி 2-வது இடத்தை பிடித்துள்ளார். 3-வதாக ஜெர்மனி பிரதமர் அங்கேலா மெர்கெல் 7.2 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பெற்றார். 4-வது இடத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா (6.6 புள்ளி), 5-வது இடத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் (6.5), 6-வது இடத்தை பிரெஞ்சு அதிபர் பிரான்காயிஸ் ஹாலாண்டே (6.3), 7-வது இடத்தை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (6.1), 8-வது இடத்தை ரஷிய அதிபர் புதின் (6) ஆகியோர் பெற்றுள்ளனர். அடுத்த இடங்களை பிரேசில் அதிபர் தில்மா ரவுசெப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோரும் பிடித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகளை ஹார்வர்டு கென்னடி பள்ளியின் ஜனநாயக நிர்வாகம் மற்றும் கண்டுபிடிப்புகள் மையம் வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளை அந்த பள்ளியின் சீன நிபுணர் அந்தோணி செய்ச் ஆராய்ந்துள்ளார். ஜின்பிங் முதலிடம் பெற்றது குறித்து செய்தி கூறும்போது, ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்தும் அல்லது எங்கு மக்கள் அரசியல் தலைவர்கள் பற்றி கட்டாயமாக விவாதிக்கிறார்களோ அந்நாட்டு மக்கள், பல கட்சி ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் உள்ள மக்களை விட தங்கள் தலைவருக்கு உயர்வான இடத்தை அளிக்கிறார்கள் என்பது தெரிந்தது என்கிறார். நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்திருப்பது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் சமீபத்தில் தான் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார். எனவே பெரும்பாலான மக்கள் உண்மையிலேயே அவரைப்பற்றி அதிகம் தெரியாமல் இருக்கிறார்கள் என நான் சந்தேகப்படுகிறேன். அவரது சொந்த நாட்டு மக்கள் அவர் தேர்தலில் பெற்ற வெற்றி உணர்விலேயே இன்னும் இருப்பதாகவும் நான் கருதுகிறேன் என்றும் செய்தி கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி