செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்துக்கு யு சான்று அளிக்க தணிக்கை குழு மறுப்பு!…

‘ஐ’ படத்துக்கு யு சான்று அளிக்க தணிக்கை குழு மறுப்பு!…

‘ஐ’ படத்துக்கு யு சான்று அளிக்க தணிக்கை குழு மறுப்பு!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இதில் விக்ரம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். நாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கியுள்ளார். பொங்கலுக்கு படம் ரிலீசாகிறது.

இந்நிலையில் ‘ஐ’ படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் ‘யுஏ’ சான்று அளித்தனர். ‘யு’ சான்று பெற்றால்தான் அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும். ‘யு’ சான்று அளிக்கும் படி வற்புறுத்தியும் தணிக்கை குழுவினர் ஏற்கவில்லை. படக்குழுவினரோ ‘யு’ சான்று பெறுவதில் உறுதியாக இருக்கிறார்கள். இதையடுத்து படத்தை மேல் முறையீட்டு கமிட்டிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி