செய்திகள்,திரையுலகம் யூடியூபில் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ!…

யூடியூபில் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ!…

யூடியூபில் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ!… post thumbnail image
சென்னை:-இளம் இசையமைப்பாளர்களில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்தைத்தொட்டவர் அனிருத். சமீபகாலமாக அனிருத் இசையமைத்த பல பாடல்கள் அவருடைய ஒரிஜினல் சரக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாடலுக்கு மட்டுமல்ல, பின்னணி இசைக்கும் வெளிநாட்டு படங்களிலிருந்தும், ஆல்பங்களிலிருந்தும் சுட்டுத்தான் இசையமைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு அனிருத் மீது சுமத்தப்பட்டு வருகிறது.

‘கத்தி’ படத்துக்கு இசையமைத்தபோதும் அனிருத் எங்கிருந்து எல்லாம் காப்பியடித்தார் என்று ஆதாரத்துடன் சில வீடியோக்கள் யூடியூபில் வெளியிடப்பட்டது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கி சட்டை படத்துக்கு இசையமைத்திருக்கும் அனிருத், இந்தப்படத்தின் இசையையும் பல்வேறு இடங்களில் இருந்தே சுட்டிருக்கிறார். இதையும் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்து, ஒரிஜினல் இசையையும், அனிருத் காப்பியடித்ததையும் தொகுத்து வீடியோவாக யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி