செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம் : கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு!…

பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம் : கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு!…

பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம் : கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் கெப்லர் விண்கலம். ஒன்றரை வருடத்திற்கு முன்பு உபகரணங்கள் செயலிழந்ததால் அதன் நோக்கம் தோல்வியடைந்து விட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில் நேற்று தனது ஆராய்ச்சியின் மைல் கல்லாக புதிய கிரகம் ஒன்றை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் நேற்று அறிவித்தனர்.

பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள இந்த கிரகம் 20000 மைல் விட்டம் கொண்டு காணப்படுகிறது. எனவே இது பூமியை விட இரண்டரை மடங்கு பெரிதானது. நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே ‘சூப்பர்-எர்த்ஸ்’ என்று அழைக்கப்படும் கிரகங்களின் தொகுப்பில் உள்ள ஒரு கிரகமான இது, சூரியனை விட அளவில் சிறியது. கடந்த பிப்ரவரி மாதம் வான் இயற்பியல் ஆய்வு மேற்கொள்ளும் ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் மையத்தை சேர்ந்த ஆண்ட்ரூ வெண்டர்பர்க் தலைமையில் ஒரு குழு தொலைநோக்கியின் மூலம் நடத்திய ஒன்பது நாள் சோதனை ஓட்டத்தின் போது, ஹெச்.ஐ.பி 116454. என்ற நட்சத்திரத்திற்கு முன் ஒரு கிரகம் கடந்து செல்வதைக் கண்டுபிடித்தனர்.

தரையிலிருக்கும் தொலைநோக்கிகளின் தொடர் அவதானிப்புகளின் மூலமும், கனடிய மோஸ்ட் செயற்கைக் கோளும் அந்த புதிய கிரகத்தின் இருப்பை உறுதி செய்துள்ளது. வானியலாளர்கள் அநேகமாக இது ஒரு நீர் உலகம் அல்லது ஒரு ‘மினி நெப்டியூன்’ ஆக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
மனிதர்கள் வசிப்பதற்கான வேறு கிரகத்தை கண்டறியும் நாசாவின் வானியல் ஆய்வில் இது முக்கிய திருப்புமுனை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி