2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு!…

விளம்பரங்கள்

பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஹேசல்வூட்டின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்று 97 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.4 ஓவரில் 408 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் வார்னர்(29) வாட்சன் மற்றும் ஷான் மார்ஷ்(32) எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்டோர்க்புல் 10 பவுண்டரிகள் உட்பட 55 ரன்கள் குவித்தார். கேப்டன் 88 பந்துகளில் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

மார்ஷ் 7 ரன்களுடன் களத்தில் வருகிறார். போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இன்று சீக்கிரமாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 52 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இன்னும் இந்திய அணியைவிட முதல் இன்னிங்ஸில் 187 ரன்கள் பின் தங்கியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: