செய்திகள்,திரையுலகம் இன்று இரவு 10 மணிக்கு ‘ஐ’ படத்தின் டிரைலர் வௌியீடு!…

இன்று இரவு 10 மணிக்கு ‘ஐ’ படத்தின் டிரைலர் வௌியீடு!…

இன்று இரவு 10 மணிக்கு ‘ஐ’ படத்தின் டிரைலர் வௌியீடு!… post thumbnail image
சென்னை:-இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், எப்படிப்பட்ட கேரக்டருக்கும் நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஐ’. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த ஐ படம் இப்போது பொங்கல் விருந்தாக வர இருக்கிறது. ‘ஐ’ படத்தில் விக்ரம், பாடி பில்டர், மாடலிங், கூன் விழுந்த கோரமுகம், மிருக மனிதன் என பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி பெரும் சாதனை படைத்துள்ளது. விரைவில் 1 கோடியை தொட இருக்கிறது. 1 நிமிட டீசரையே 90 லட்சம் பேர் பார்த்த நிலையில், இப்போது படத்தின் 2 நிமிட டிரைலரை இன்று இரவு 10 மணிக்கு வௌியிட இருக்கின்றனர். மொத்த படத்தின் கதை மற்றும் சுவாரஸ்யத்தை 2 நிமிடங்களில் கொண்டு வர இருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி