செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியர்கள் ஆரோக்கியமாக அதிக நாட்கள் வாழ்கிறார்கள்: ஆய்வில் தகவல்!…

இந்தியர்கள் ஆரோக்கியமாக அதிக நாட்கள் வாழ்கிறார்கள்: ஆய்வில் தகவல்!…

இந்தியர்கள் ஆரோக்கியமாக அதிக நாட்கள் வாழ்கிறார்கள்: ஆய்வில் தகவல்!… post thumbnail image
வாஷிங்டன்:-இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு முதல் குழந்தை மற்றும் வயது வந்தோரின் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி நாட்டில் 2 சதாப்தங்களாக குழந்தைகள் மற்றும் வயது வந்தோரின் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது. உலக அளவில் 188 நாடுகளில் எடுக்கபட்ட ஆய்வுகளில் உலகம் முழ்வதும் கடந்த 2 சதாப்தங்களாக தொற்று நோய்கள் மற்றும் இதய நோயினால் இறப்பவர்களின் விகிதம் குறைந்து உள்ளது.

குறிப்பாக இந்திய மக்கள் தொகை அளவில் விரைவில் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறலாம். 2013ம் ஆண்டு 1.2 கோடி உலகின் மரணத்தில் இந்தியாவில் மட்டும் 19 சதவீதம். 1999ல் இருந்து இந்தியாவில் இறப்பு சராசரி சதவீதம் சரிந்து வருகிறது. குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் மரணம் குறைந்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு குழந்தைகள் 3.7 சதவீதமும் பெரியவர்கள் 1.3 சதவீதமும் இறப்பாக இருந்தது.1990 முதல் 2013 க்கு இடையில் ஆயுள் காலம் ஆண்களுக்கு 57.3 ஆண்டுகளில் இருந்து 64.2 ஆகவும்,பெண்களுக்கு 58.2 ஆண்டுகள் என்பது 68.5 ஆக உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் குழந்தைகளும் பெரியவர்களும் நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள் என இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளை மற்றும் ஆய்வு அறிக்கையின் உதவி ஆசிரியர் டாக்டர் ஜிமோ பன்னியம்மகள் தெரிவித்தார். உலக சுகாதார துறையில் வளர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கை பயன்படுத்தி நாம் மக்களை கொல்லும் நோய்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். என டாக்டர் தெரிவித்து உள்ளார். உலக அளவில் இறப்பிற்கான காரணங்கள் பரவலாக வேறு படுகிறது. ஆனால் உலக அளவில் போதை மருந்து பயன்படுத்துவது மற்றும் சீறுநீரக கோளாறால் இறப்பது ஆகியவை 1990 முதல் அதிகரித்து வருகின்றன என அந்த ஆய்வில் தெரிவிக்கபட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி