செய்திகள்,திரையுலகம் ரூ.100 கோடியை தாண்டியது ‘லிங்கா’ பட வசூல்!…

ரூ.100 கோடியை தாண்டியது ‘லிங்கா’ பட வசூல்!…

ரூ.100 கோடியை தாண்டியது ‘லிங்கா’ பட வசூல்!… post thumbnail image
சென்னை:-கடந்த 12ம் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘லிங்கா’ படம் ரிலீசானது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் 700 தியேட்டர்களில் திரையிட்டனர். தெலுங்கு மொழியிலும் இப்படம் ரிலீசானது. அங்கும் நிறைய தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கேரளாவிலும் கணிசமான திரையரங்குகளில் ரிலீசானது.

முதல் நாள் மட்டும் ரூ. 37 கோடி வசூல் குவித்து சாதனை படைத்தது. சிறப்பு காட்சிகள் மூலமும் வசூல் குவிந்தது. உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ‘லிங்கா’ படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ. 60 கோடி வசூலித்து உள்ளது. ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட இதர மாநிலங்களில் 3 நாட்களில் ரூ. 26 கோடி வசூலித்து உள்ளது. வெளிநாடுகளில் ரூ. 21 கோடி வசூலாகி உள்ளது. இது ரஜினியின் முந்தைய படமான ‘எந்திரன்’ படத்துக்கு இணையான வசூல் என்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி