செய்திகள் ஒட்டிப்பிறந்த குழந்தைகளை ஆபரேஷன் மூலம் பிரிக்க முடிவு: பிரார்த்தனை செய்ய பேஸ்புக்கில் வேண்டுகோள்!…

ஒட்டிப்பிறந்த குழந்தைகளை ஆபரேஷன் மூலம் பிரிக்க முடிவு: பிரார்த்தனை செய்ய பேஸ்புக்கில் வேண்டுகோள்!…

ஒட்டிப்பிறந்த குழந்தைகளை ஆபரேஷன் மூலம் பிரிக்க முடிவு: பிரார்த்தனை செய்ய பேஸ்புக்கில் வேண்டுகோள்!… post thumbnail image
புளோரிடா:-அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் வசிக்கும் மைக்கேல் பிரான்ட்லி-பிரயண்ட் மிராபல் தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் கேஜ் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் கருவுற்ற மிராபல் கடந்த வெள்ளியன்று கார்டர் மற்றும் கார்னர் என்று ஒட்டிப்பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அடுத்த மாதம் பிறக்கவேண்டிய இக்குழந்தைகள் ஒரு மாதம் முன்னதாகவே பிறந்துள்ளன. இரு ஆண் குழந்தைகளின் முகமும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு உள்ளது.

அவர்களது முகம் தனித்தனியே உள்ளபோதும், அடிவயிறு இருவருக்கும் ஒன்றாக இணைந்துள்ளது. அதே சமயம் இடுப்புக்கு கீழே இருவரும் தனித்தனி உடல் உறுப்புகளை கொண்டுள்ளனர். அவர்களது உடலை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், கல்லீரலை தவிர அனைத்து பாகங்களும் தனித்தனியே இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை தனித்தனியே பிரிக்க முடிவு செய்துள்ளனர்.

எனினும் இவர்களை பிரிக்கும்போது, ஐந்து முதல் 25 சதவிகிதிம் தான் இருவரும் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் தங்கள் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்போது எவ்வித ஆபத்தும் நேராமல் இருக்க பிரார்த்தனை செய்யுமாறு பேஸ்புக் மூலம் பெற்றோர் வேண்டுகோள் வைத்துள்ளனர். நாமும் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வோம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி