செய்திகள்,விளையாட்டு ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…

ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…

ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் வீரர்களை தக்க வைத்து கொள்வதற்கும், விடுவிப்பதற்கும் நேற்று கடைசி நாளாகும். விடுவிக்கப்படும் வீரர்கள் ஏலத்தின் மூலம் மீண்டும் விற்பனை செய்யபடுவார்கள்.

கடந்த ஆண்டில் அதிக தொகைக்கு (ரூ.14 கோடி) ஏலம் போன யுவராஜ்சிங்கை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விடுவித்துள்ளது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் இக்பால் அப்துல்லாவை பெங்களூரு அணி புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விக்கெட் கீப்பர் மன்விந்தர் பிஸ்லாவை வாங்கி இருக்கிறது. தனது விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலை விடுவித்து இருக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டில் ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்த தினேஷ் கார்த்திக், ரூ.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆகியோரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி கழற்றி விட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், மைக் ஹஸ்ஸி, பிரவீன்குமார் ஆகியோரை விடுவித்து இருக்கிறது.

அதேநேரத்தில் பேட்ஸ்மேன் உன்முக்சந்த் (ராஜஸ்தான்), வேகப்பந்து வீச்சாளர் வினய்குமார் (கொல்கத்தா), விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் ஆகியோரை வாங்கி இருக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விஜய் உள்பட 13 வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து புஜாரா, பாலாஜி, முரளி கார்த்திக் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். ஹர்பஜன்சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷேவாக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் தக்க வைத்து கொண்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி