செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி மரணம்!…

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி மரணம்!…

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி மரணம்!… post thumbnail image
சென்னை:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சக்ரி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 40. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப் பாத் என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்ரி. தெலுங்கின் முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் பல படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். இதுவரை சுமார் 85 படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.

தாசரி நாராயணராவ் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த எர்ர பாசு தான் அவரது இசையமைப்பில் வெளிவந்த கடைசிப் படம். முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்னாத் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்த பின்தான் சக்ரி புகழ் பெற ஆரம்பித்தார். இருவரது கூட்டணியில் வந்த படங்கள் மியூசிக்கல் ஹிட்டாகவும் அமைந்தன. ரவி தேஜா, ஜுனியர் என்டிஆர், நாகார்ஜுனா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு சூப்பர் ஹிட்டான பாடல்களை சக்ரி கொடுத்திருக்கிறார்.

அவரது இசையமைப்பில் இடியட், அம்மா நானா ஒக்க தமிழ் அம்மாயி, சிம்ஹா ஆகிய படங்களின் பாடல்கள் இன்று வரை பேசப்படுபவை. சக்ரியின் திடீர் மரணம் தெலுங்குத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சக்ரியின் அப்பா, ஜில்லா வெங்கட நாராயண ஒரு பாடகரும், நடிகருமாவார். அவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். சக்ரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தெலுங்குத் திரையுலகினர் விரைந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி