செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு டெஸ்ட் தர வரிசையில் வீராட் கோலி முன்னேற்றம்!….

டெஸ்ட் தர வரிசையில் வீராட் கோலி முன்னேற்றம்!….

டெஸ்ட் தர வரிசையில் வீராட் கோலி முன்னேற்றம்!…. post thumbnail image
துபாய்:-ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட வீராட் கோலி இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் 11 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்னும் எடுத்தார். இந்த இரண்டு சதங்கள் மூலம் அவர் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் 11 இடங்கள் முன்னேறி 16 இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் இன்னிங்சில் 53, இரணடாவது இன்னிங்சில் 99 ரன்கள் எடுத்த விஜய் 8 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் இலங்கை வீரர் சங்ககரா 915 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 888 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸ் 2-வது இடத்திலும், 887 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால் 3-வது இடத்திலும், 880 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் 4 இடத்திலும் உள்ளனர். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்ததால் இரண்டு இடங்கள் முன்னேறி இந்த இடத்தை பெற்றுள்ளார்.

முதல் இன்னிங்சில் சதமும் இரண்டாவது இன்னிங்சில் அரை சதமும் அடித்த ஸ்மித் 13-வது இடத்தில் இருந்து முதல் முறையாக 10 இடங்களுக்குள் 8-வது இடத்தை பெற்றுள்ளார். மற்ற இந்திய வீரர்கள் புஜாரா (18), டோனி (31), ரகானே (47), அஸ்வின் (51), ரோகித் சர்மா (52)-வது இடத்திலும் உள்ளன. பந்து வீச்சில் இந்திய வீரர்கள் புவனேஸ்வர் குமார் 8-வது இடத்திலும், ஜடேஜா 9-வது இடத்திலும் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி