செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் 2016ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.3 சதவீதமாக உயரும்: ஐ.நா. தகவல்!…

2016ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.3 சதவீதமாக உயரும்: ஐ.நா. தகவல்!…

2016ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.3 சதவீதமாக உயரும்: ஐ.நா. தகவல்!… post thumbnail image
நியூயார்க்:-உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பாக ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள், நுகர்வோருக்கும் வர்த்தகர்களுக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், உலக நாடுகளின் பொருளாதாரமானது அடுத்த இரு ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் வளர்ச்சி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது எபோலா வைரஸ் பாதித்த நாடுகளான வடக்கு ஆப்பிரிக்க நாடுகளும், உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் நிறைந்துள்ள உக்ரைன் போன்ற நாடுகளும் புதிய பொருளாதாரத்திற்கான மாற்றத்தினை நோக்கி பெரும் சவால்களை சந்திக்க உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சியானது 2014-ம் ஆண்டு 2.6 என்ற சதவீத அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஒப்பிடுகையில், 2015ம் ஆண்டில் 3.1 என்ற சதவீதமாகவும், 2016-ல் 3.3 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் 2014ம் ஆண்டில் 5.4 என்ற சதவிகித அளவிற்கும், அடுத்த ஆண்டில் 5.7 என்ற அளவிலும், 2016-ம் ஆண்டில் 6.3 சதவிகிதமாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், ஈரான், வங்காளதேசம் போன்ற நாடுகளும் வரும் ஆண்டில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பெற திட்டமிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி