செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி!…

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி!…

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி!… post thumbnail image
அடிலெய்டு:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் பங்குபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இப்போட்டியில் விராத் கோலி கேப்டனாக அறிமுகமானார். இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணிக்கு வெற்றிக்கான இலக்காக 364 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இன்று புஜாரா அவுட்டானவுடன் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்தார். ஏற்கனவே முதல் இன்னிங்சில் 115 ரன்களை கோலி குவித்திருந்தார். இதன் மூலம் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். இதற்கு முன் இச்சாதனையை ஆஸ்திரேலியாவின் க்ரெக் சாப்பல் நிகழ்த்தியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்திய அணியில் 4வது வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி