ரஜினி, விஜய், அஜீத்தை முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்!…

விளம்பரங்கள்

சென்னை:-தற்போது இந்தியாவின் நம்பர்-1 இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஹ்மான். இந்நிலையில் பிரபல போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, இந்தியாவின் டாப்-100 பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வௌியிட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்த பட்டியலை வௌியிட்டுள்ளது. பிரபலங்களின் சம்பளம் மற்றும் அவர்கள் எந்தளவு பிரபலமாக இருக்கிறார்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் வௌியிடப்படுகிறது.

இதில் இந்தாண்டு நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். அவர் ஓராண்டில் ரூ.244.50 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானுக்கு அடுத்தப்படியாக அமிதாப்பச்சனும்(ரூ.196.75), 3வது இடத்தில் ஷாரூக்கானும்(ரூ.202.40 கோடி), 4வது இடத்தில் தோனியும்(ரூ.141.80 கோடி), 5வது இடத்தில் அக்ஷ்ய் குமாரும்(ரூ.172 கோடி) உள்ளனர். தென்னிந்திய பிரபலங்களை பொறுத்தமட்டில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு 30வது இடத்தில் உள்ளார்.

தமிழ் நடிகர்களை பொறுத்தமட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 13வது இடத்தில் இருக்கிறார். விஜய் 41வது இடத்திலும், ரஜினி 45வது இடத்திலும், அஜித் 51வது இடத்திலும் இருக்கின்றனர். ரஜினி, விஜய், அஜித்தை காட்டிலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 39வது இடத்தில் இருக்கிறார். அதேசமயம் இவர்கள் எல்லாவற்றையும் விட ஏ.ஆர்.ரஹ்மான் (13வது இடம்) முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: