செய்திகள்,விளையாட்டு முதல்டெஸ்ட்: இந்திய அணி 444 ரன்களுக்கு ஆல் அவுட்!…

முதல்டெஸ்ட்: இந்திய அணி 444 ரன்களுக்கு ஆல் அவுட்!…

முதல்டெஸ்ட்: இந்திய அணி 444 ரன்களுக்கு ஆல் அவுட்!… post thumbnail image
அடிலெய்டு:-இந்திய ஆஸ்ரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா மூன்றாம் நாளான நேற்று காலை தனது முந்தைய நாள் ஸ்கோரான 517/7-க்கு டிக்ளேர் செய்தது. எனவே நேற்று காலை இந்தியா தனது முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் கேப்டன் கோலி அதிகபட்சமாக 115 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அவுட்டாகாமல் களத்தில் இருந்த ரோகித்(33), சாகா(1) ஜோடி இன்று மீண்டும் தங்களது ஆட்டத்தை தொடர்ந்து ஆடியது. இன்று ஆட்டம் தொடங்கியது முதல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. லயன் வீசிய ஓவரில் இன்று முதல் விக்கெட்டாக ரோகித் 43 ரன்னில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கரன் சர்மாவை சிடில் க்ளீன் போல்ட் ஆக்கினார். சிறிது நேரத்தில் சாகாவும் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து இஷாந்த் சர்மாவும் டக் அவுட்டானார். எனினும் 9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சமி அதிரடியாக ஆடி 24 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது ஸ்கோரில் ஒரு சிக்சரும் அடங்கும்.

வருண் ஆரோன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 444 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் லயன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் 73 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இன்று காலை ஒன்பது மணி நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருப்பதுடன் இந்திய அணியை விட 166 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி