செய்திகள்,திரையுலகம் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2–ம் திருமணம்!…

நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2–ம் திருமணம்!…

நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2–ம் திருமணம்!… post thumbnail image
மும்பை:-இந்தியில் நடிகர் ஹிருத்திக்ரோஷன் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருக்கும் நடிகர் சஞ்சைகான் மகள் சுசானாகானுக்கும் 2000ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரேகான், ரிதான் என இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த வருடம் இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்கள். கடந்த மாதம் நவம்பர் 1ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள குடும்ப நல கோர்ட்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஹிருத்திக்திட்டமிட்டு உள்ளார். ஹிருத்திக் ரோஷனுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து ஜாதகத்தில் நல்ல நிலை உள்ளது என்று ஜோதிடர்கள் கனித்து உள்ளனர். சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவார் என்கின்றனர். அதோடு ஒரிரு மாதத்தில் ஜாதகப்படி அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து விடும் என்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி