அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு!…

ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு!…

ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு!… post thumbnail image
நியூயார்க்:-பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசியபோது, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில், ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி நேற்று தாக்கல் செய்தார்.

அத்தீர்மானத்துக்கு 177 நாடுகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. எந்த ஐ.நா. தீர்மானத்துக்கும் இவ்வளவு அதிக நாடுகள் ஆதரவு தெரிவித்தது இல்லை. இதனால், அந்த தீர்மானம் அமோக ஆதரவுடன் நிறைவேறியது. அதையடுத்து, ஜூன் 21ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது. ஐ.நா.வின் அறிவிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி