செய்திகள்,திரையுலகம் நடிகர் பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்!…

நடிகர் பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்!…

நடிகர் பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்!… post thumbnail image
சென்னை:-தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில், பிரசாந்த் நடிக்கும் சாகசம் படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில், நா.முத்துக்குமார் எழுதிய பாடலை, இளம் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையில், 5 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரேயா கோசல், சங்கர் மகாதேவன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இந்த பாடல்களை பாடியுள்ளனர். படத்தில் இடம்பெறும் பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரியின் சிறப்பு ஐட்டம் பாடலிற்கு, ராஜூ சுந்தரம் நடனம் அமைத்துள்ளார். பாடல்களை, கார்கி வைரமுத்து, நா.முத்துக்குமார், யுகபாரதி மற்றும் கபிலன் எழுதியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி