செய்திகள்,திரையுலகம் இன்று முதல் தியேட்டர்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’!…

இன்று முதல் தியேட்டர்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’!…

இன்று முதல் தியேட்டர்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’!… post thumbnail image
சென்னை:-அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் புதிய படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் இந்திய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரையில், கம்யூட்டர்களிலும், செல்போன்களிலும் இந்த டீசரை கண்டுகளித்து வந்த ரசிகர்கள், இன்று முதல் தியேட்டர்களிலும் இந்த டீசரை கண்டுகளிக்கலாம். இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், இன்று இரவு 12.00 மணிக்கு ‘என்னை அறிந்தால்’ படத்தில் கானா பாலா பாடிய ‘அதாரு உதாரு’ என்ற பாடலையும் வெளியிடவிருக்கிறார்கள். இப்பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். கானா பாலாவுடன், விஜய் பிரகாஷும் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்பாடல், டீசரைப் போலவே பெரிய வெற்றியடையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி