செய்திகள்,திரையுலகம் ஆம்பளயாக மாறும் மதகஜராஜா!…

ஆம்பளயாக மாறும் மதகஜராஜா!…

ஆம்பளயாக மாறும் மதகஜராஜா!… post thumbnail image
சென்னை:-சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல் படம் மதகஜராஜா. அந்த படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்தார் விஷால். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்திருந்தனர். ஆனால், படத்தை வெளியிடும் நேரத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட, படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் நானே படத்தை வெளியிடுகிறேன் என்று விஷாலே களமிறங்கினார்.

அதனால் ஏற்படட பிரஷர் காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதுதான் மிச்சம். எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் மதகஜராஜா படம் இப்போதுவரை கிடப்பிலேயே கிடக்கிறது. அதையடுத்து, சுந்தர்.சி அரண்மனை படத்தை இயக்கினார். அதேபோல் விஷாலும், நான் சிகப்பு மனிதன், பூஜை படங்களில் நடித்து முடித்து விட்டார். இந்நிலையில், சுந்தர்.சி-விஷால் இருவரும மீண்டும் ஆம்பள படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். ஆனால், மதகஜராஜா படத்தின் கதை சுந்தர்.சிக்கு ரொம்ப பிடித்தமானதாம். அந்த அளவுக்கு கலகலப்பாக ஆக்சன் கலந்து இயக்கியிருந்தாராம். அதனால் இப்போது அந்த படத்தை தழுவியே ஆம்பள படத்தை அவர் இயக்கி வருவதாக ஒரு தகவல் காதோரம் கிசுகிசுக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி