நடிகர் சந்தானம் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!…

விளம்பரங்கள்

சென்னை:-குருவி படத்தை தயாரித்ததன் மூலம் படத்தயாரிப்பில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயன்ட் மூவிஸ் பேனரில் ஆரம்பத்தில் நிறைய வெளிப்படங்களைத் தயாரித்தார். அதோடு, மைனா உட்பட பல படங்களை வெளியிட்டும் வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு, மற்ற ஹீரோக்கள் படங்களை தயாரிப்பதையே நிறுத்திவிட்டார். தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் நண்பேன்டா படத்தின் ஹீரோவும் உதயநிதிதான்.

இப்படத்தை வெளியிட்ட பிறகு மீண்டும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் மற்ற ஹீரோக்ககளின் படங்களை தயாரிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் உதயநிதி. கயல் படத்தைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கவிருக்கும் புதிய படமொன்றை தயாரிக்க உள்ளது ரெட் ஜெயன்ட் நிறுவனம்.

இந்தப் படத்தை தயாரித்த பிறகு சந்தானம் இயக்கத்தில் உதயநிதி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். உதயநிதிக்காக சந்தானம் ஒரு கதையை உருவாக்கி வைத்திருக்கிறாராம். தற்போது நடித்து வரும் படங்கள் முடிவடைந்ததும் சந்தானத்தின் கதையை கேட்கவிருக்கிறார் உதயநிதி. கதை ஓ.கே.யானால் விரைவில் சந்தானத்தின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: