283-வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கரண் ஷர்மா!…

விளம்பரங்கள்

அடிலெய்டு போட்டியின் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பிறந்தவரான 27 வயதான கரண் ஷர்மா இந்தியாவின் 283-வது டெஸ்ட் வீரர் ஆவார்.

டெஸ்டுக்குரிய தொப்பியை அவருக்கு இந்திய கேப்டன் டோனி வழங்கினார். இந்திய துணை கண்டத்திற்கு வெளியே இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் டெஸ்டில் அறிமுகம் ஆவது 24 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இந்த வகையில் கடைசியாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே, 1990-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: