2014ம் ஆண்டின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ படத்தின் பாடல்கள் தேர்வு!…

விளம்பரங்கள்

சென்னை:-விஜய்சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கத்தி’. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவருடைய இசையில் வெளிவந்த பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், கத்தி படம் அனிருத்துக்கு மேலும் ஒரு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ படத்தின் பாடல்களை ஐடியூன்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இது படக்குழுவினருக்கும், அனிருத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அனிருத்துக்கு படக்குழுவினரும், திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தின் பாடல்கள் உரிமையை பெற்ற ஈராஸ் மியூசிக் நிறுவனம் அனிருத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, ‘கத்தி’ படத்தின் பாடல்கள் சிறந்த ஆல்பமாக தேர்வானதை எண்ணி பெருமை அடைகிறோம் என்றும் அறிவித்துள்ளது. அனிருத் ஐ-டியூன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: