செய்திகள்,விளையாட்டு சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!…

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!…

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!… post thumbnail image
புவனேஸ்வர்:-ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 0–1 என்ற கோல் கணக்கிலும், 2–வது ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 2–4 என்ற கோல் கணக்கிலும் தோற்றது.

இந்நிலையில், இந்திய அணி நேற்று தனது மூன்றாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதியது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா, மூன்றாவது போட்டியில் வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்று ஏமாற்றாத இந்திய வீரர்கள் பொறுப்புடன் விளையாடி, 3-2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தினர். 18-வருடங்களுக்கு பின் இந்தியா, நெதர்லாந்தை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தது. எனவே, வியாழக்கிழமை நடைபெற உள்ள காலிறுதியில் பெல்ஜியம் அணியுடன் விளையாட உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி