வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரியது ‘பாரத ரத்னா’. நாட்டுக்கு செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எம்.பி.க்கள் விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஜ்பாய்க்கு வரும் 25ம் தேதி 89 வயது முடிந்து 90 வயது பிறக்கிறது. அப்போது வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்று தெரிகிறது. பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமரான முதல் நபர் என்ற சிறப்பு வாஜ்பாய்க்கு உண்டு. அவர் தலைமையில் 1996–ம் ஆண்டு அமைந்த மத்திய அரசு 13 நாட்களே நீடித்தது. பிறகு 1998–ம் ஆண்டு தேர்தலில் வென்று அவர் ஆட்சியைப் பிடித்தார். 2004–ம் ஆண்டு வரை அவர் ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடித்தது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவர், 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்தவர் என்ற பெருமையையும் வாஜ்பாய் பெற்றார்.

2004–க்குப் பிறகு உடல் நலம் குன்றியதால் அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். திருமணம் செய்து கொள்ளாத அவர் டெல்லியில் உள்ள வீட்டிலேயே இருந்து வருகிறார். மிக, மிக முக்கியமானவர்களைத் தவிர வேறு யாரையும் அவர் சந்திப்பது இல்லை. பிரதமர் மோடி, வாஜ்பாயை தன் குருவாக ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார். வாஜ்பாயின் பிறந்த நாளை அவர் ‘நல்லாட்சி தினம்’ என்று கொண்டாட அவர் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: