செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் 1800 விமானங்களை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்!…

1800 விமானங்களை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்!…

1800 விமானங்களை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்!… post thumbnail image
சென்னை:-அண்மையில், அதிரடி விலை குறைப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தி வந்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் நிதிப் பற்றாக்குறை காரணமாக நடப்பு டிசம்பர் மாதத்தில் 1800-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. ஒரு மாதத்திற்கு மேல் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் செய்யக்கூடாது என ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. அட்வான்ஸ் புக்கிங் தொடர்பான விதிமுறைகளை இந்நிறுவனம் மீறியிருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், ஏ.ஏ.ஐ.-க்கு செலுத்த வேண்டிய வங்கி உத்தரவாத நிலுவைத் தொகை ரூ.200 கோடியை செலுத்த தவறினால் வழக்கம் போல கேஷ் அண்ட கேரி முறையில் டிக்கெட் புக்கிங் செய்ய அறிவுறுத்தப்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என டி.ஜி.சி.ஏ. அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, நேபாலுக்கு செல்லும் சில விமானங்கள் உள்பட உள்நாட்டு போக்குவரத்து விமானங்கள் அனைத்தையும் வரும் டிசம்பர் 31 தேதி வரை ரத்து செய்துள்ளது ஸ்பைஸ்ஜெட். மொத்தம் 1861 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 81 விமானங்கள் வரும் திங்கட்கிழமை புறப்படுவதற்காக தயாராக இருப்பவை ஆகும். அடுத்தடுத்த இந்த செய்திகளால் இந்நிறுவனத்தின் பங்கு விலையும் 13 சதவீதம் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி