இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 354/6!…

விளம்பரங்கள்

அடிலெய்டு:-இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்ஸும், டேவிட் வார்னரும் களம் இறங்கினர். தொடக்க ஜோடி சரியாக 50 ரன்கள் குவித்ததும் பிரிந்தது. ரோஜர்ஸ் (9) ரன்க்ளில் இஷந்த் சர்மா பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய வாட்சன் (14) ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம், தொடக்க ஆட்டக்காரர் வார்னர் அபாராமாக ஆடி சதம் விளாசி அசத்தினர். மைக்கேள் கிளார்க் 60 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்த போது முதுகுவலி காரணமாக வெளியேறினார். இதனிடையே சதம் அடித்து அசத்திய வார்னர் அணியின் ஸ்கோர் 258 ரன்களாக இருந்த போது 145 ரன்கள் எடுத்த நிலையில் கேவி சர்மா பந்தில் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறினார்.தொடர்ந்து மார்ஷ் 41 ரன்களிலும் லோயான் 3 ரன்களிலும் பிராட் ஹடீன் ரன் எதுவுமின்றி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.

ஸ்மித் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் முகம்மது சமி, வரும் ஆரோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, கேவி சர்மா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுனர். இரண்டாவது நாள் ஆட்டத்தில் மீதமுள்ள நான்கு விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்தும் முனைப்புடன் நாளை இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: