செய்திகள்,திரையுலகம் நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!…

நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!…

நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!… post thumbnail image
சென்னை:-அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ருத்ரமாதேவி, பாகுபலி என இரண்டு சரித்திர படங்களிலும் நடிக்கிறார். இந்த படங்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளன. ரஜினியுடன் நடித்த ‘லிங்கா’ படம் வருகிற 12ம் தேதி ரிலீசாகிறது.

இந்நிலையில்தான் அனுஷ்காவை அஞ்சலி விமர்சித்துள்ளார். அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறது. அவர் பிசியாக நடிப்பதால் வேறு சில சரித்திர கதையம்சம் உள்ள படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. எனவே அவர்கள் வேறு நடிகையை தேர்வு செய்யும் முடிவில் இருக்கின்றனர். அந்த பட வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் முயற்சியில் அஞ்சலி இறங்கி இருக்கிறார்.

அவர் அனுஷ்காவுக்கு வயதாகி விட்டது என்றும் என்னைப் போல் அவரால் நடிக்க இயலாது என்றும் எல்லா கேரக்டருக்கும் நான் பொருத்தமாக இருப்பேன் என்றும் பேசியதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது. இதனால் அஞ்சலி மீது அனுஷ்கா கோபமாக இருக்கிறார். இருவருக்கும் விரைவில் மோதல் வெடிக்கும் என்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி