செய்திகள்,விளையாட்டு உலகக்கோப்பை: உத்தேச அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் இல்லை!…

உலகக்கோப்பை: உத்தேச அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் இல்லை!…

உலகக்கோப்பை: உத்தேச அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் இல்லை!… post thumbnail image
புதுடெல்லி:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு இன்று வெளியிட்டது.

இதில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம்பெற்றிருந்த சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் ஆகியோர் இந்த உத்தேச அணியில் இடம் பெறவில்லை.
டோனி, தவான், ரோகித் சர்மா, ரகானே, உத்தப்பா, வீராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் யாதவ், மனோஜ் திவாரி, மணிஷ் பாண்டு, சகா, சஞ்சு சாம்சன், அஸ்வின், பர்வேஷ் ரசூல், கர்ன் சர்மா, அமித் மிஸ்ரா, ரவிந்தீர ஜடேஜா, அக்சார் பட்டேல், இசாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், மொகமது சமி, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், தவால் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, மோகித் சர்மா, அசோக் திண்டா, குல்தீப் யாதவ், முரளி விஜய் ஆகியோர் உத்தேச பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி