பேனா கேமிரா மூலம் நோயாளி குழந்தைகளின் அந்தரங்கங்களை படம் பிடித்த டாக்டர் கைது!…

விளம்பரங்கள்

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ரத்த புற்று நோய் டாகட்ர் மைலெஸ் பிராட்புரி (வயது 41) கேம்பிரிட்ஜ் நகரில் அட்டன் புருக்ஸ்சில் மருத்துவமனை நடத்தி வந்தார்.இவரிடம் குழந்தைகளும் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து கொள்ள வந்தனர். இவ்வாறு மொத்தம் 18 குழந்தைகள் சிகிச்சைக்காக அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இவர் மருத்துவமனையில் ரகசிய கேமிராக்களை பொருத்தி நோயாளிகள் உடைமாற்றுவது மற்றும் அவரகளது பெற்றோர்கள் உடைமாற்றுவதை படம் பிடித்து உள்ளார். மேலும் குழந்தைகளின் சட்டைப்பையில் பேனா கேமராவை பொருத்தி நோயாளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் அந்தரங்கங்களை படம் பிடித்து உள்ளார். மேலும் பல குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இது 2009 முதல் 2013 வரை நடந்து உள்ளது. இந்த குற்றங்களுக்காக 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாக்டர் பிராட்புரி கைது செய்யப்பட்டார்.

டாக்டர் மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.டாக்டரிடம் இருந்து குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் ஆடையின்றி இருந்த அந்தரங்க படங்கள் 16 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.இந்த வழக்கு கேம்ப்ரிட்ஜ் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி எனது அனுபவத்தில் இதுபோனற பாலியல் குற்றத்தை கண்டது இல்லை.கவனமாக நீண்ட திட்டமிட்டு இந்த காரியத்தை செய்து உள்ளார். டாக்டர் நம்பிக்கைக்கு துரோகம் செய்து உள்ளார்.என கூறினார். குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக டாக்டருக்கு நீதிபதி 22 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்த்து தீர்ப்பு கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: