செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் போல் என்னால் செய்ய முடியாது – மகேஷ் பாபு!…

நடிகர் விஜய் போல் என்னால் செய்ய முடியாது – மகேஷ் பாபு!…

நடிகர் விஜய் போல் என்னால் செய்ய முடியாது – மகேஷ் பாபு!… post thumbnail image
சென்னை:-பிரபல நடிகர் மகேஷ்பாபு ஒரு சமுக சேவை தொண்டு நிகழ்ச்சியில் பங்கு எடுத்தார். இதில் நடிகை சமந்தா மகேஷ் பாபுவை சில கேள்விகள் கேட்க அதற்கு பதில் அளித்து வந்தார் .அப்போது சமீபத்தில் நீங்க பார்த்த தமிழ் படம் எது என்று கேட்டதற்கு கத்தி படம் பார்த்தேன் என கூறினார் . உடனே சமந்தா கத்தி படத்தின் ரீமேக்கில் நீங்கள் நடிப்பீர்களா என கேட்க முடியவே முடியாது என்று தெரிவித்தார்.

பொதுவாகவே எனக்கு ரீமேக் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை ஏனென்றால் என்னால் அவர்கள் செய்த கதாபர்த்திரத்தை 100 சதவிதம் பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வி என் மனதில் ஓடி கொண்டே இருக்கும் ,அதனாலே எனவே எனக்கு ரீமேக் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை, அதுவும் கத்தி படத்தில் விஜய் நடிப்பு மிக அருமை, அவர் போல் என்னால் நடிக்க முடியுமா என்றால் முடியாது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி